தக்காளி விலை உயர்வால் தக்காளி சட்னியே மறந்துவிட்டது - ஆர்.பி.உதயகுமார்

0 2544

தக்காளி விலை உயர்வால், பலருக்கும் தக்காளி சட்னியே மறந்துபோய்விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை குன்னத்தூரில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஆர்.பி.உதயகுமார், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையை கேட்டாலே, தலை கிறுகிறுத்துப் போய்விடுவதாகத் கூறினார்.

30 ஆயிரம் கோடி ஊழல், டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3600 கோடி ஊழல், பத்திரப்பதிவு துறையில் 3000 கோடி முறைகேடு என திமுக ஆட்சியில இதயம் வெடிக்கும் வகையில் ஊழல் உள்ளதாக கூறிய ஆர்.பி.உதயகுமார், அடுத்த ஓரிரு நாட்களில், மேலும் ஒரு அமைச்சருக்கு நெஞ்சடைப்பு வரக்கூடும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments