மேடையில் கூடவே இருந்த பழனிவேல் தியாகராஜனை பேச அழைக்காதது ஏன் ? மதுரை மாவட்ட செயலாளர் செய்தது சரியா ?
மதுரையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் மேடையில் இருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, மாவட்ட செயலாளர் பேச அழைக்காத நிலையில் அவரது நேரத்தை தான் எடுத்துக் கொள்வதாக கூறி அமைச்சர் எ.வ வேலு பேசினார்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் பகுதியில் மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ வேலு :
தமிழ்திரை உலகில் கருணா நிதியின் வசனம் இல்லை என்றால் சிவாஜியும் இல்லை எம்.ஜி.ஆரும் இல்லை என்றார்
பெரியார், அண்ணா,கலைஞர் ஆகியோரின் மொத்த கொள்கைகளை கொண்ட ஆட்சியை நடத்துவதே திராவிட மாடல் ஆட்சி என்ற எ.வ. வேலு, காவி அணிந்தவர்கள் எல்லாம் எங்கள் விரோதிகள் அல்ல எனவும், காவி அணிந்து நல்லதை செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்.
இனி திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்க முடியாது, திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது என்றார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றி ஆன்மீக சாதனை படைத்ததாகவும் கூறினர்
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பேச அழைக்காமல் , அமைச்சர் ஏ.வ. வேலுவை மாவட்ட செயலாளர் தளபதி பேச அழைத்தபோது அமைச்சர் ஏவ வேலு, அருகில் இருந்த பழனிவேல் தியாகராஜனை பேச செல்லுமாறு கூறினார். இருந்தபோதிலும் மாவட்ட செயலாளர் தன்னை அழைக்கவில்லை என்பதால் அவர் எழுந்து செல்லவில்லை.
அமைச்சர் ஏவ வேலு பேச தொடங்கிய போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பார்த்து, உங்கள் நேரத்தை நான் எடுத்துக் கொண்டேன் என கூறி பேச்சை தொடங்கினார்.
Comments