விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

0 4584

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தனியார் டாக்ஸி ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலியில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கம் நோக்கி வந்த ரெட் டாக்ஸி என்று நிறுவனத்தைச் சேர்ந்த வாடகைக் காரின் ஓட்டுநர், விராலிமலையை அடுத்துள்ள லஞ்சமேடு கைகாட்டி என்ற இடத்தில் கண் அயர்ந்ததாக தெரிகிறது.

இதனால் அந்த டாக்ஸி மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனிலும், பின்னர் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் மீதும் மோதியது.

அதே வேகத்தில் அங்கிருந்த பேருந்து நிழற்குடையின் மீதும் இடித்து நின்றது. இதில் கார் ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments