தூக்கமின்மையால் ஏற்படும் அதிர்ச்சி ரிப்போர்ட்.... எச்சரிக்கும் அரசு மருத்துவர்..!
சமூக வலைத்தளங்கள் காரணமாக 36 விழுக்காடு இந்தியர்கள் தூக்கமின்மையால் தவிப்பதாகவும், இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அரசு மகப்பேறு மருத்துவர் ஜெய செல்வி கூறும்போது, நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமாக ஆழ்ந்த தூக்கம் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் 59 சதவீத இந்தியர்கள் சராசரி உறங்கும் நேரமான பதினோரு மணியைத் தாண்டியும் விழித்திருப்பதாகத் தெரிவித்தார்.
தூக்கமின்மை காரணமாக பெண்களுக்கு கருமுட்டையில் நீர்கட்டி நோய் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட மருத்துவர், இதனைப் பயன்படுத்தி கருத்தரிப்பு மையங்கள் ஆங்காங்கே முளைத்து வருவதாகத் தெரிவித்தார். இது ஆபத்தான ஒன்று என எச்சரித்த மருத்துவர் ஜெயசெல்வி, தூங்கும் நேரத்தில் டீ, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், மெல்லிசை, வாசிப்பு போன்றவை நல்ல தூக்கத்தைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments