யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் பயணித்த கார் மோதி ஒருவர் காயம்

0 1252

சென்னையில், யூடியூபர் டி.டி.எஃப். வாசன் பயணித்த கார் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வரும் டி.டி.எஃப். வாசன், தனது நண்பர்களுடன் கார் ஒன்றில் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது, மேம்பால சுவற்றில் மோதிய கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த பெட்ரோல் விற்பனை நிலைய தடுப்பில் இடித்து நின்றது.

விபத்தில், டூவீலரில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில், வாசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் காரை விட்டு விட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.

முகப்பேர் மெக்கானிக் கடை ஒன்றில் நின்றிருந்த வாசனின் காரை பறிமுதல் செய்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை வாசன் நடிக்க உள்ள மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செந்தில் செல்அம் ஓட்டி வந்ததாக தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவரை வாசனின் நண்பர் மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் வாசன் மீது புகார் கொடுக்கவில்லையெனவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments