பணத்துக்காக போராடல.. மகன் வாழ்க்கைக்காக போராட்டம்.. குறைமாத குழந்தை நலமாக இருப்பதில்லையா? - தாயார் கண்ணீர்
தவறான சிகிச்சையால் குழந்தையின் வலதுகை அகற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஆறுதல் கூற வந்த அமைச்சரின் பேச்சு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள குழந்தையின் தாயார் அஜிசா, குறைமாத குழந்தைகள் நலமுடன் இருப்பதில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்...
அறுவை சிகிச்சைக்காக செருகப்பட்ட ஊசியால், வலதுகை அழுகும்நிலை ஏற்பட்டு, அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியதால், அதுகுறித்து விசாரிக்க விசாரணைக்கு குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த விசாரணை குழுவின் விசாரணைக்கு, குழந்தையின் பெற்றோரான தஸ்தகீர்-அஜிசா தம்பதியர் ஆஜராகினர்.
குழந்தையின் கை அகற்றப்பட்ட பின், ஆறுதல் கூற வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தங்கள் குழந்தையை குறைமாத குழந்தை, அதற்கு பல உபாதைகள் உள்ளதாக கூறியது பெரும் மனசோர்வை ஏற்படுத்தியிருப்பதாக, அஜிசா கூறினார்.
தாம் பணத்திற்காக நான் போராடவில்லை என்றும், குழந்தையின் வாழ்க்கைக்காக தாயாக போராடுவதாகவும், குழந்தையின் தாய் அஜிசா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
Comments