சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்..!
சென்னையில் உள்ள 82 நியாயவிலைக் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை தொடங்கியது.
ஒவ்வொரு கடைக்கும் முதலில் வரும் 50 பேருக்கு குடும்ப அட்டையோ வேறு ஆவணங்களோ இன்றி, தலா ஒரு கிலோ வீதம் தக்காளியை வாங்கிச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் 50 ரூபாய் வரை விலை குறைவாக உள்ளதாகக் கூறி பலர் தக்காளியை வாங்கிச் சென்றனர்.
வட சென்னையில் 83 ரேஷன் கடைகளிலும், மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 கடைகளிலும் தக்காளி விற்கப்பட்டது.
சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதுதவிர பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளிலும் குறைந்த விலையில் தக்காளி விற்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
Comments