தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது - பிரதமர்
9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் ஆன்மிக மையங்கள் புத்துயிர் பெற்று வருவதுடன், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா மைய கட்டிடத்தை காணொலி மூலம் திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டியிடுவதாக கூறினார்.
உலகளாவிய ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியா கடமைக்கு முன்னுரிமை அளிக்கும் நாடு என்று குறிப்பிட்ட பிரதமர், அடுத்த 25 ஆண்டுகள் கடமைக்கான காலம் என்றும் கூறினார்.
Comments