அமெரிக்காவில் கரோவிண்ட்ஸ் கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் ஓடும் வழித்தடத்தை தாங்கி நிற்கும் ஒரு ஸ்டீல் தூணில் விரிசல்..!

0 1435

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள கரோவிண்ட்ஸ் கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் ஓடும் வழித்தடத்தை தாங்கி நிற்கும் ஒரு ஸ்டீல் தூணில் விரிசல் கண்டறியப்பட்டதையடுத்து, கேளிக்கை பூங்கா மூடப்பட்டது.

வடக்கு கரோலினா பகுதியில் மிகவும் உயரமான ரோலர் கோஸ்டராக அறியப்படும் கரோவிண்ட்ஸ் கேளிக்கை பூங்காவின் Fury 325 ரோலர் கோஸ்டர், 95 மைல் வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரோலர் கோஸ்டரின் சவாரியை பூங்காவிற்கு வந்திருந்த பார்வையாளர் ஒருவர் வீடியோ எடுத்தபோது, ஸ்டீல் தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் குறித்து தெரியவந்தது.

வீடியோ எடுத்த பார்வையாளர், ஸ்டீல் தூண் விரிசல் குறித்து பூங்கா நிர்வாகத்திற்கும், தீ அணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து பூங்கா மூடப்பட்டது. பழுது சரி செய்யப்படும்வரை பூங்கா மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments