உலகின் பல்வேறு நாடுகளில் தென்பட்டது சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு...!
சூப்பர் மூன் எனப்படும் நிலவு பெரிதாகத் தெரியும் நிகழ்வு உலகின் பல நாடுகளில் காணப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள ரோண்டா என்ற இடத்தில் காணப்பட்ட பெரு நிலவை ஏராளமானோர் கண்டு களித்தனர். நிலவு பூமிக்கு அருகில் சுமார் 10 சதவீத தூரம் நெருங்கி வரும் நிகழ்வே சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவாகும்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட நகரங்களிலும் பெரு நிலவு காணப்பட்டது. குறிப்பாக ரியோவில் உள்ள கோபகபனா கடற்கரையில் தென்பட்ட பெரு நிலவைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் பரவசமடைந்தனர்.
Comments