போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 175 கோடி மோசடி.. பெங்களூரில் இருந்து வெளிநாடு தப்ப முயன்றவர் கைது..!
ஜி எஸ் டி யில் உள்ளீட்டு வரி கடன் போலி ஆவணங்கள் தயாரித்து 175 கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை பெரம்பூரை சேர்ந்த பிரேம நாதன் என்பவர் வீட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இதையடுத்து பிரேமநாதனுடன் தொடர்பில் இருந்த பிரேம்ராஜா என்பவர் பெங்களூருவில இருந்து தப்ப முயன்ற போது கைதானார்.
இதையடுத்து இந்த மோசடிக்கு பயன் படுத்தப்பட்ட செல்போன்கள், இன்டர்நெட் மோடம்கள்,லேப்டாப்புகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 25 வங்கிக் கணக்குகளை முடக்கியும், போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் மோசடி கும்பல் பதிவு செய்த 20 ஜிஎஸ்டி பதிவுகளையும் ரத்து செய்துள்ளனர்.
Comments