நியாய விலைக் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை..!
விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று முதல் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
வட சென்னையில் 32 கடைகள், மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட உள்ளது.
சென்னை நியாய விலைக்கடைகளின் நடக்கும் விற்பனையின் அடிப்படையில், அனைத்து மாவட்ட ரேஷன் கடைக்கும் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
Comments