ஆன்லைனில் பப்ஜி விளையாடியபோது இந்திய இளைஞனுடன் காதல்.. 4 குழந்தைகளுக்குத் தாயான பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் எல்லை தாண்டிய காதல் கைதில் முடிந்தது

0 3705

ஆன்லைனில் பப்ஜி விளையாடியபோது அறிமுகமான ஆண் நண்பரை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் நாட்டு பெண்மணி கைது செய்யப்பட்டார்.

திருமணமாகி 4 குழந்தைகளுக்குத் தாயான அந்த 27 வயது பெண்மணி பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்துவந்துள்ளார்.

கணவர் துபாயில் வேலை பார்த்துவந்த நிலையில், ஆன்லைனில் பப்ஜி விளையாடியபோது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் என்ற 22 வயது இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

தனது 4 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு விமானம் மூலம் நேபாளம் சென்று அங்கிருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்.

நொய்டாவில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒன்றாகத் தங்கியிருந்த அந்த பெண்ணும், அவரது ஆண் நண்பர் சச்சினும் திருமணம் செய்துகொள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளனர்.

வழக்கறிஞர் அளித்த தகவலின் பேரில் பாகிஸ்தானி பெண், அவரது ஆண் நண்பர், அவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தவர்  கைது செய்யப்பட்டனர். அந்த பெண்ணின் அண்ணன் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments