அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்
அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
2020-ம் ஆண்டு யெஸ் பேங்க் தொடர்பான மோசடி வழக்கில் அனில் அம்பானி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். இதேபோல், 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கிலும் அனில் அம்பானி விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
கடந்த செப்டம்பரில், 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் அனில் அம்பானி மீது வருமான வரித்துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Comments