ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டு மக்கள் மறியல் போராட்டம்
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, பி.வி களத்தூர் செல்லும் சாலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக நேதாஜி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 17 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருக்கும் 52 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், வீடுகளை காலி செய்ய மறுத்து , மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளதாகவும், இங்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments