மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும் - அண்ணாமலை

0 1422
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும் - அண்ணாமலை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறிய அண்ணாமலை, ஆனால் அதே மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி ஒற்றை செங்கல்லாக மட்டுமே உள்ளது என செங்கல்லை உயர்த்திக் காட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் நடைபெற்ற குமரி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியும் ஒற்றைச் செங்கல்லாகவே உள்ளது என்று மீண்டும் செங்கல்லை உயர்த்திக் காட்டினார்.

அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்த இந்தியாவாக இருக்க வேண்டும் என்றால் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றும் ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் எந்த புரிதலும் இல்லாமல் அதை எதிர்க்கிறார் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments