உலக வங்கியிடமிருந்து 700 பில்லியன் டாலர் கடனுதவியை பெறுகிறது இலங்கை
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை, கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் ஒரு பில்லியன் டாலருக்கான கடன் தவணை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக வங்கியிலிருந்து 700 மில்லியன் டாலர் கடனுதவியை இலங்கை பெறுகிறது.
உலக வங்கி 700 மில்லியன் டாலர்களை வழங்க ஒப்புதல் தெரிவித்திருப்பதை அடுத்து, இலங்கை இப்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறது.
இந்த நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டுக்காக ஒதுக்கப்படும், மீதமுள்ள 200 மில்லியன் டாலர்கள் நிதி நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் இலங்கை தரப்பில் கூறப்படுகின்றது.
Comments