மணிப்பூரில் 2 பிரதான தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தடுப்புகள் அகற்றம்
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பிரிவினர் இரண்டு பிரதான தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து தடுப்புகளை அகற்றி அமைதியை நிலைநிறுத்த ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளனர்.
2 மாதங்களாக சாலைகளில் தடுப்புகள் அமைத்து போராட்டம் நடத்தியதால் அத்தியாவசியப் பொருட்கள் கூட கொண்டு வரமுடியாதபடி நிலைமை மோசம் அடைந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்று இரண்டு பிரதான அமைப்புகளும் தடுப்புகளை அகற்றுவதாக அறிவித்துள்ளன. இதனிடையே முதலமைச்சர் பைரேன் சிங் பதற்றமான பகுதிகளை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று இம்பாலின் சில பகுதிகளில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
Comments