விமான எஞ்சின் தயாரிப்பில் இந்தியாவிற்கு உதவும் பிரான்ஸ்... ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ், பிரான்ஸின் 'சஃப்ரான்' இணைந்து பணியாற்ற முடிவு...!
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு போர் விமான எஞ்சின் தயாரிப்பில், இந்தியாவிற்கு உதவ பிரான்ஸ் நாட்டின் ”சஃப்ரான்” நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 13ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, அதிபர் இமானுவேல் மேக்ரனை சந்தித்து இருதரப்பு வர்த்தக உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுவரும் போர் விமானங்களுக்கான எஞ்சினை இந்தியாவில் வைத்தே வடிவமைத்து கொடுக்க பிரான்ஸின் ”சஃப்ரான்” நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் ஹைதரபாத்தில் வர உள்ள ”சஃப்ரான்” தொழிற்சாலையில் வைத்தே ஏர்பஸ், போயிங் பயணிகள் விமானம் மற்றும் ரஃபேல் போர் விமானத்தின் எஞ்சினும் பழுதுநீக்கம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments