மகாராஷ்ட்ராவில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!
மகாராஷ்ட்ரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில், 33 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து சம்ருத்தி - மகாமார்க் அதிவிரைவுச் சாலையில் சென்றபோது பேருந்தின் டயர் வெடித்து கிழிந்தது. சக்கரத்தின் ரிம் தரையில் உராய்ந்து கொண்டு சென்றதில் தீப்பொறி ஏற்பட்டு டீசல் டேங்குக்குப் பரவி பேருந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் பட்நாவிஸ் சம்பவ இடத்துக்கு சென்று எரிந்த பேருந்தை பார்வையிட்டனர்.
விபத்து குறித்து கேட்டறிந்த ஏக்நாத் ஷிண்டே, பின்னர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 5 லட்சமும் மத்திய அரசு சார்பில் தலா 2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments