நாட்டில் கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்குகிறது மத்திய அரசு - பிரதமர்
நாட்டில் கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளையும், வாய்ப்புகளையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், பால் கூட்டுறவு சங்கங்களின் அளப்பரிய பங்களிப்பால் உலகின் முன்னணி பால் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று கூறினார். வெண்ணெய் முதல் நெய் வரை இந்திய பால் பொருட்களுக்கு உலக அளவில் தேவை அதிகரித்துள்ளதாகவும், இந்திய திணை பொருட்களுக்கும் உலக அளவில் சந்தை உருவாகியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
பணப் பரிவர்த்தனைகளைச் சார்ந்திருப்பதை மாற்றும் நோக்கில் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், உலக அளவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
Comments