மீண்டும் யுனெஸ்கோவில் அமெரிக்கா இணைய உறுப்பு நாடுகள் ஒப்புதல்..!
ஐ.நா.வின் கலாசார மற்றும் அறிவியல் அமைப்பான யுனெஸ்கோவில் அமெரிக்கா மீண்டும் இணைய உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை இணைப்பற்கான தீர்மானம் 2011-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யுனெஸ்கோவுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்திவைத்தன.
அதன் பின்பும் இஸ்ரேலுக்கான எதிரான போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறி யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகிக் கொள்வதாக 2017-ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது. இதையடுத்து யுனெஸ்கோவில் அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்தது.
இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் யுனெஸ்கோவில் மீண்டும் சேர அமெரிக்கா அண்மையில் விருப்பம் தெரிவித்தது. இது தொடர்பாக முடிவெடுக்க, யுனெஸ்கோவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. யுனெஸ்கோவில் தற்போது 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், வாக்கெடுப்பில் 142 நாடுகள் பங்கேற்றன. அவற்றில் 132 நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் எதிராக வாக்களித்தன.
Comments