ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க பயணத்தை தொடங்கியது முதல் குழு..!
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயில் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கான பயணத்தை பக்தர்களின் முதல் குழு தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை இன்று முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 62 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் முதலே பக்தர்கள், மலை அடிவார முகாம்களுக்கு வரத் தொடங்கினர்.
இந்நிலையில் பக்தர்களின் முதல் குழு தங்கள் நடை பயணத்தை, மத்திய காஷ்மீரின் பால்தால் முகாமிலிருந்து தொடங்கியது. மலைப்பாதையில் நடக்க முடியாதவர்கள், குதிரைகள் மற்றும் டோலியில் அமர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரை தொடங்கியதையடுத்து காஷ்மீரில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவம், மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments