ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி இடமாற்றம்

0 2105

ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஒடிசாவின் பாலசோர் அருகே கடந்த மாதம் ரயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பல்வேறு உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், தென்கிழக்கு ரயில்வேயின் பொதுமேலாளராக இருந்த அர்ச்சனா ஜோஷி அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கர்நாடகாவில் உள்ள எலகங்கா ரயில்சக்கரத் தயாரிப்பு ஆலைக்கு பொதுமேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தென் கிழக்கு ரயில்வேயின் புதிய மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு அனுமதி அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments