"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மீண்டும் டைட்டானிக் கப்பலுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்த "ஓஷன்கேட்" நிறுவனத்தின் புதிய விளம்பரம் வெளியானதால் சர்ச்சை...
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற "ஓஷன்கேட்" நிறுவனத்தின் நீர்மூழ்கி கடலுக்கடியில் வெடித்து அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்து 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் டைட்டானிக் கப்பலுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் மாதம் 18ஆம் தேதி, ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய அன்றைய தினமே நேர்ந்த கோர விபத்தில், ஓஷன்கேட் நிறுவனத்தின் சி.இ.ஒ. உள்பட அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இனி ஆழ்கடல் சுற்றுலா மேற்கொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்த அந்நிறுவனம் அடுத்தாண்டு ஜூன் மாதம், டைட்டானிக் கப்பலை பார்க்க 2 கோடி ரூபாய்க்கு சுற்றுலா டிக்கெட் விற்பதாக இணைய தளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது.
Comments