அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை - சபாநாயகர் அப்பாவு
அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் உரிமை மாநில முதலமைச்சரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று தமிழக சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை பாளையங்கோட்டையில் பேட்டியளித்த அவர், அமைச்சர்கள் தாங்களாக பதவி விலகலாம், அல்லது முதலமைச்சர் அவர்களை பதவியை விட்டு நீக்கலாம் என்று தெரிவித்தார்.
அதைத்தவிர அமைச்சரை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
Comments