பல்கலைக்கழகத்தில் இனவாரி மாணவர் சேர்க்கை முறையை ரத்து செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்

0 1693

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் இன வாரி மாணவர் சேர்க்கை முறையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை குறிப்பிடும் நடைமுறை 1960-ம் ஆண்டு முதல் இருந்து வந்த நிலையில், அதற்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அனுபவங்கள் மற்றும் திறமைகளின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தாம் முற்றிலுமாக ஏற்கவில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும், இன பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் வாய்ப்பை பறிக்கும் தீர்ப்பு இது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டியுள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப், இது தேசத்திற்கு சிறந்த நாள் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments