மெக்சிகோவில் வெப்ப அலையால் 100க்கும் மேற்பட்டோர் பலி..
மெக்சிகோவில் நிலவிய அதிக வெப்பம் காரணமாக கடந்த 2 வாரங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சில பகுதிகளில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது.
இந்நிலையில், ஹீட்-ஸ்ட்ரோக் மற்றும் நீரிழப்பு காரணமாக நியூவோ லியோன், தமெளலிபாஸ், வெராக்ரூஸ் ஆகிய மாகாணங்களில் 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வெப்ப அலைக்கு ஒருவர் மட்டுமே பலியானது குறிப்பிடத்தக்கது.
Comments