தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா இன்று பொறுப்பேற்பு

0 1548

தமிழக அரசின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா இன்று பொறுப்பேற்கிறார்.

இறையன்பு இன்றுடன் ஓய்வுபெறுவதை அடுத்து தமிழ்நாடு அரசு இதற்கான அரசாரணையை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக சிவ்தாஸ் மீனா பணியாற்றி வந்தார். 1989-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச்சை சேர்ந்த சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தானை சேர்ந்தவராவார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனிச்செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணியாற்றி வந்துள்ளார். 2017-ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணியில் சேர்ந்த அவர், 2021ஆம் ஆண்டில் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தமிழக பணிக்கு அழைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments