இடத்தகராறில் வழக்கறிஞர் உள்பட இருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. ராணுவ வீரரை தேடும் போலீஸ்..

0 1669

தென்காசி மாவட்டத்தில் இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த  ராணுவ வீரர் சுரேஷ் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர் சுரேசுக்கும், அசோக் குமாருக்கும் இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அசோக் குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தடுக்க வந்த அசோக்கின் பெரியப்பா துரைராஜ் என்பரையும் சுரேஷ் வெட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தசம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments