'ஆஸ்கர் விருதுகள்' வழங்கும் தேர்வுக்குழுவில் இடம்பிடித்தார் இயக்குனர் மணிரத்னம்

0 2401

ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவில் இயக்குநர் மணிரத்னம் இடம் பெற்றுள்ளார்.

அடுத்த ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' வழங்கும் தேர்வுக்குழுவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்து 398 உறுப்பினர்கள் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து இயக்குனர் மணிரத்னம், நாட்டு நாட்டு பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி, அதன் பாடலாசிரியர் சந்திரபோஸ், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், நடிகர் சூர்யாவும் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments