மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் ஆதரவு - ஆம் ஆத்மி கட்சி
மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதை ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் கூறினார்.
டெல்லியில் பேட்டி அளித்த அவர் அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
ஆனால் இது அனைத்து மதங்களுக்கும் தொடர்புடையது என்பதால், இது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து மதத்தினரிடம் இருந்தும், அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெற்று ஒருமித்த கருத்து அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் சந்தீப் பதக் கூறினார்.
Comments