நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 3ஆவது வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 3-ஆவது வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓரிரு நாட்களில் தேதியை இறுதி செய்யும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 17 அல்லது 20ஆம் தேதியன்று தொடங்கும் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக அவசர சட்டம் குறித்த மசோதா உள்ளிட்டவை இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.
மழைக்கால கூட்டத்தொடரை நாடாளுமன்றத்தின் புதிய கட்டட்டத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.
Comments