போக்குவரத்து நிறைந்த சந்திப்புகளில் ஆம்புலன்ஸ் நிற்காமல் கடக்க 'எம்-சைரன்' என்னும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!

0 1958

போக்குவரத்து நிறைந்த சந்திப்புகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்காமல் எளிதில் கடப்பதற்காக, சென்னையில் "எம் சைரன்" எனும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சாலை வழியாக ஆம்புலன்ஸ் வருகிறது என்ற தகவலை தெரிவிக்க போக்குவரத்து சந்திப்புகளில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டர் மூலம் எம்-சைரன் தொழில்நுட்பம், ஆம்புலன்ஸ் வரும் தகவலை டிஜிட்டல் திரைக்கு கொடுக்கும் என கூறப்படுகிறது.

அதைப் பார்த்து போக்குவரத்து காவலர், இடையூறின்றி ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக 25 தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு, 16 போக்குவரத்து சந்திப்புகளில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சேத்துப்பட்டு ஈகா திரையரங்கு சந்திப்பில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார், விரைவில் 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் இந்த தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments