கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை தீயிட்டு கொளுத்திய போலீசார்..!
கம்போடியாவில் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 ஆயிரத்து 700 கிலோ போதைப் பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
அந்நாட்டில் கடந்த ஓராண்டில் சுமார் 5 ஆயிரத்து 700 கிலோ அளவிலான கொக்கைன், ஹெராயின், மெத்தன்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, அந்நாட்டு உள்துறை அமைச்சர் முன்னிலையில், போலீசார் போதைப்பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்.
கம்போடியாவில் 80 கிராமுக்கு மேல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments