தடை கேட்ட மனுக்கள்... தள்ளுபடி செய்த நீதிமன்றம்... வருகிறான் மாமன்னன்..!
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை கோரிய இரு மனுக்கள் மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏஞ்சல் திரைப்படத்தை முடித்து கொடுக்காமல் உதய நிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று ஓ.டி.எஸ். பிலிம்ஸ் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிடெட்டின் கூட்டு நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும், ஏஞ்சல் படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் , ரெட் ஜெயிட்ன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதேபோல், மாமன்னன் படம் வெளியானால் இருசமூகத்திற்கு இடையே மோதல் ஏற்படும் எனக் கூறி படத்திற்கு தடைவிதிக்க மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், அனைவருக்கும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளது என கருத்து தெரிவித்தனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை பாதுகாப்பது குறித்து காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் என கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே மறுத்துவிட்டனர்.
Comments