''உலகின் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பாக இந்தியா மாறியுள்ளது..'' - நிதின் கட்கரி..!
மத்திய அரசு மேற்கொண்ட பணிகளால், கடந்த 9 ஆண்டுகளில் இந்திய சாலைகள் 59 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லயில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்தில் பேசிய அவர், 2014-ம் ஆண்டில், இந்தியாவில் 91 ஆயிரத்து 287 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு இருந்த சாலைகள், தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் கிலோ மீட்டராக மாறியுள்ளதாக கூறினார்.
இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பாக இந்தியா மாறியுள்ளதாக தெரிவித்தார்.
Comments