உணவகத்தில் குடிபோதையில் ஆம்லேட் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்துநிலைய வளாகத்தில் உள்ள உணவகத்தில், குடிபோதையில் ஆம்லட் கேட்டு கடையின் உரிமையாளரையும், அவரது மகனையும் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உணவகத்திற்கு குடிபோதையுடன் வந்த 3 பேர், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஆம்லட் கேட்டால் தரமுடியாதா என கடை உரிமையாளர் சுப்பிரமணியிடம் திடீரென வாக்குவாதம் செய்தனர்.
ஆர்டரில் ஆம்லட் சொல்லவில்லையே என சுப்பிரமணி சொல்ல, 3 பேரும், கடையில் இருந்த பொருட்களை வீசி எரிந்து தகராறில் ஈடுபட்டனர். அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கட்டையை கொண்டு சுப்பிரமணியத்தையும், அவரது மகன் தினேஷையும் கடுமையாக தாக்கினர்.
தலையில் காயமடைந்த சுப்பிரமணி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார்.
இந்நிலையில், உணவகத்திற்கு அருகே உள்ள பழக்கடை சிசிடிவி காமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, அடிதடியில் ஈடுபட்ட அசோக், நவீன், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments