கட்டி முடித்து 2 மாதங்களே ஆன, அரசுப் பள்ளி கட்டிடத்தில், ஆங்காங்கே விரிசல்.. உசிலம்பட்டி எம்எல்ஏ குற்றச்சாட்டு

0 1607

மதுரை உசிலம்பட்டி அருகே, கட்டி முடித்து 2 மாதங்களே ஆன, அரசுப் பள்ளி கட்டிடத்தில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி சுவரை சுரண்டினால், சிமெண்ட் பூச்சு கையோடு உதிரும் நிலையும் காணப்படுகிறது.

பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில்  3 வகுப்பறைகளை கொண்ட கட்டிடம், கடந்த மார்ச்சில் கட்டி முடிக்கப்பட்டது. இன்னும், அதிகாரபூர்வமாக திறக்கப்படாமல் உள்ள இந்த கட்டிடத்தில், ஒரு வகுப்பறையில் மட்டும், மாணவ, மாணவிகள் அமர்ந்து பயில்வதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், பள்ளியை பார்வையிட்டு பேசிய தொகுதி எம்.எல்ஏ அய்யப்பன், கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் காணப்படுவதாகவும், சுவரை சுரண்டினால், கையோடு சிமெண்ட் பூச்சு பெயர்வதாகவும் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து பேசிய மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், அந்த புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் குறித்து விவரங்களை சேகரித்து ஆய்வு செய்வதாக கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments