கனடா காட்டுத் தீயின் புகை ஐரோப்பாவை அடைந்தது

0 1509

கனடாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயின் புகைமண்டலம் வடஅட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை நீண்டுள்ளது.

76 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் தற்போது கனடாவில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீ மிக மோசமான பதிவாகும் என என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை தெரிவித்துள்ளது.

மேலும் காட்டுத் தீ காரணமாக 160 மில்லியன் டன் கார்பனை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக இந்த மாதத் தொடக்கத்தில் நியூயார்க் நகரம் புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், தற்போது வட அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பாவை அடைந்துள்ளது. புகை அதிகமாக இருந்தாலும் காற்றின் தரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments