நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொதுசிவில் சட்டம் அவசியம் - பிரதமர் மோடி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொதுசிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போபாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குடிமக்களுக்கான சட்டங்கள் வெவ்வேறாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
வாக்கு வங்கிக்காக ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் மற்றும் இதர சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினரை சாடிய மோடி, ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு சட்டம் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு குடும்பத்திற்கே பொதுசட்டம் தேவைப்படும் போது நாட்டுக்குத் தேவையில்லையா என்றும் அவர் கூறினார்.இருவிதமான சட்டங்களுடன் ஒரு நாடு செயல்பட முடியாது என்றும் மோடி கூறினார். அரசியல் சாசனம் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதை வலியுறுத்துவதாகவும் பிரதமர் தமது பேச்சில் குறிப்பிட்டார்.
Comments