அம்மா உணவகங்களுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அம்மா உணவகங்களுக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை மக்களின் பசியை போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காலத்தில் அனைத்துத் தொழில்களும் முடங்கியபோது, தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களுக்கு வந்த அனைவருக்கும் விலையில்லாமல் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்துதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பொருட்கள் வழங்குவது 90% குறைக்கப்பட்டுவிட்டதாகவும் பல இடங்களில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்த நிலையில் இருப்பதுடன், குடிநீரும் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அம்மா உணவகங்களுக்கு குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கி இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments