நாடாளுமன்ற தேர்தலுக்கு கூடுதலாக 30 சதவிகிதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ

0 1394

நாடாளுமன்ற தேர்தலுக்கு 30 சதவிகிதம் கூடுதலாகவே வாக்குப்பதிவு இயந்திரங்களும் விவி பேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ  தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வாக்குபதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாஹூ, புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தால் அடுத்த 3 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments