5 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!
போபாலில் உள்ள ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் பச்சைக் கொடியசைத்ததும், போபால்- ஜபல்பூர், கஜூராஹோ - இந்தூர், கோவா- மும்பை, ஹதியா - பாட்னா, தார்வாட் - பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் 5 வந்தே பாரத் ரெயில்களும் பயணத்தை தொடங்கின.
அதைத் தொடர்ந்து, போபால் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, வாக்கு வங்கி அரசியலுக்காக ஏழை மக்களை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டினார். சிறுபான்மை மக்களை பேச்சால் திருப்திபடுத்தி காங்கிரஸ் செய்யும் குறுக்கு வழி அரசியல் நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் அவர் சாடினார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க ஊழல்வாதிகள் அனைவரும் பாட்னாவில் ஒன்று திரண்டதாக விமர்சித்த பிரதமர் மோடி, ஊழலில் தொடர்புடைய யாரையும் தாம் தப்பிக்க விடப்போவதில்லை என்று கூறினார். எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஊழலை இணைத்து பார்த்தால், அது 20 லட்சம் லட்சம் கோடியை விட கூடுதலாக இருக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.
Comments