வாக்னர் படையெடுப்பு பின்னணியில் அமெரிக்காவின் பங்கு உண்டா.? - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் லாவ்ரோ
மாஸ்கோவை நோக்கி வாக்னர் படைகள் படையெடுத்து வந்ததன் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் கைவரிசை உள்ளதா என்பது குறித்த விசாரணை நடத்தப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் லாவ்ரோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்ய உளவுத்துறையினர் வாக்னர் படையெடுப்பில் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் ஏஜன்சிகளின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வாக்னர் படைகள் ரஷ்யாவின் தரப்பில் ஆப்பிரிக்காவுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன. அப்பணியை அந்தப் படையினர் தொடர்ந்து மேற்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments