கனரக லாரி மீது கார் உரசி தூக்கி வீசப்பட்டு விபத்து- பெண் காயம்
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே கடற்கரைச் சாலையில் சென்ற கார் கனரக லாரி மீது உரசி தூக்கி வீசப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை சேர்ந்த வினோத் என்பவர் மனைவி மற்றும் குழந்தையுடன்உவரி கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் கன்னியாகுமரி புறப்பட்டார். கூடன்குளம் வழியாக அவர் காரில் சென்ற போது திடீரென எதிரே வந்த கனரக லாரி மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதில் அந்த கார் அருகில் இருந்த ஓடையில் விழுந்து சுமார் 20மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது. அப்போது காரின் ஏர்பேக் திறந்த தால் வினோத் மற்றும் குழந்தை உயிர் தப்பினர். மனைவி ராஜலட்சுமி லேசான காயத்துடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Comments