தனியார் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்ட அதிர்ச்சி நிகழ்வு

0 16713

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் டிரெண்ட்ஸ் துணிக்கடையில் உள்ள உடை மாற்றும் அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நகரின் மையத்தில் உள்ள அந்தக் கடைக்கு இரவு இரண்டு பெண்கள் ஆடை வாங்குவதற்காக சென்றுள்ளனர். தாங்கள் வாங்கிய ஆடை சரியான அளவில் உள்ளதா என ட்ரையல் ரூம் சென்று அணிந்து பார்க்க முற்பட்டபோது, மேல் பகுதியில் உள்ள ஏசி பாயிண்ட்டில் செல்போன் ஒன்று இருந்ததை கண்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போது டிரையல் ரூமுக்கு வெளியே நின்றிருந்த மற்றொரு பெண் அவசர அவசரமாக அந்த செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார் என்று கூறப்படுகிறது. உடனடியாக அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்துக் கொண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், செல்போனுடன் அந்தப் பெண்ணை அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். செல்போனில் மெமரிகார்டும் சிம் கார்டும் மாயமாகியுள்ள நிலையில், பிடிபட்ட பெண் அவற்றை எடுத்துவிட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments