பைக்கில் இருந்து விழுந்த நபரை காப்பாற்ற முயன்றவரின் செல்போன் திருட்டு

0 1684

ஆந்திராவில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தது போன்று நடித்த நபரை காப்பாற்ற சென்றவரின் செல்போன் நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

என் டி ஆர் மாவட்டம் மயிலவரம் நகரத்தைச் சேர்ந்த  சாம்சன்என்பவர் புது எரிவாயு இணைப்பு பெறுவதற்காக நகரில் உள்ள சாய் மௌனிகா கேஸ் ஏஜென்சிக்கு சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் கீழே விழுவது போல் நடித்துள்ளார்.

அதனை உண்மை என நம்பிய சாம்சன் அந்த இளைஞருக்கு உதவி செய்யும் போது அங்கு வந்த மற்றொரு இளைஞர் கீழே விழுந்தவரை பிடிப்பது போல் நடித்து சாம்சன்சட்டை பையில் இருந்த சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடிய காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments