இந்தியா - எகிப்து இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - எகிப்து இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கெய்ரோவில் பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி இடையே நடைபெற்ற சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக கூறியுள்ளார்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலப்படுத்தும் வகையில் தலைவர்களின் பேச்சுவார்த்தை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
வேளாண்மை, தொல்லியல் மற்றும் தொல்பொருட்கள், வணிக போட்டிச் சட்டம் ஆகிய துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அரிந்தம் பாக்சி குறிப்பிட்டுள்ளார்.
Comments