தண்டவாளத்தில் இருந்த பெரிய கற்கள் மீது மோதிச் சென்ற காவிரி எக்ஸ்பிரஸ்... ரயிலை கவிழக்க சதியா.?

0 1860

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெங்களூரு - சென்னை இடையிலான ரயில் தண்டவாளத்தில் பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைசூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ஆம்பூர் அடுத்த வீரக் கோவில் பகுதியில் தண்டவாளத்தில் இருந்த பெரிய கற்கள் மீது மோதி சென்றது.

சில கற்கள் நொறுங்கியதால் ஏற்பட்ட சத்தத்தையடுத்து பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி சோதனை செய்த ஓட்டுனர், சம்பவம் குறித்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னையிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments